சீமானின் பொதுவாழ்வு சிறந்து நீடூழி வாழ உளமாற வாழ்த்துகிறேன் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

 
ep

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பிறந்த வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 57வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல் சீமானின் பிறந்த நாளையொட்டி அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதள பக்கத்திலும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில், சீமானுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், அன்பு சகோதரர், சீமான் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். சீமான் அவர்களின் பொதுவாழ்வு சிறந்து நீடூழி வாழ உளமாற வாழ்த்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.