மக்கள் அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்- ஈபிஎஸ் வாழ்த்து!

 
ep

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இதேபோல் இனிப்புகள் செய்து தங்களது உறவினர்களுக்கு பறிமாறி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோல் அரசியல் கட்சி தலைவர்களும் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தித்திக்கும் தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும், இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றென்றும் நிலைத்திருக்கட்டும். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், இனிய #தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.