வெள்ளி விழா கொண்டாடும் இயக்குநர் பாலாவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
திரையுலக வெள்ளி விழா கொண்டாடும் இயக்குநர் பாலாவுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க சில இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் திரு. பாலா அவர்களின் திரையுலக வெள்ளி விழாவும், அவர் இயக்கிய 'வணங்கான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வரும் டிசம்பர் 18ஆம் நாள் சென்னையில் நடைபெற இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.போட்டிகள் நிறைந்த தமிழ் திரை உலகில், தனது முதல் படத்தையே வணிக நோக்கமின்றி, சமூக நோக்கத்துடன் வெற்றிப்படமாக எடுத்து, இன்று வரை தனது பாணியை யாருக்காகவும் கைவிடாமல், தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளார்இயக்குநர் பாலா அவர்கள்.
Grateful to Respected Mr @EPSTamilNadu Sir, Leader Of Opposition Party (AIADMK) for your kind wishes and support on this milestone event, #VanangaanBala25 Your encouragement means the world to us. 🙏✨
— sureshkamatchi (@sureshkamatchi) December 18, 2024
@arunvijayno1's#Vanangaan@IyakkunarBala's #Vanangaan
@vhouseofficial… pic.twitter.com/4sG7HvP5V4
வணிக நோக்கமின்றி, சாமான்ய மக்களின் வலியும், வேதனைகளையும் பிரதிபலிக்கும் வகையில் திரைப்படங்களை இயக்கி, கடந்த 25 ஆண்டுகளாக போட்டிகள் நிறைந்த தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தேடிக் கொண்டவர் 'இயக்குனர் திரு பாலா' அவர்கள். தனது திரையுலக குரு 'திரு. பாலுமகேந்திரா' என்று பெருமையுடன் கூறிக்கொள்ளும் இயக்குனர்திரு. பாலா அவர்களது கலைப்பயணம் வெற்றியுடன் தொடர வேண்டும்என்று எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.