நாளைய உலகை ஆளவிருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் - எடப்பாடி பழனிசாமி

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்காக சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். இதேபோல் குழந்தைகள் தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சாதி, மத, பேதம் கடந்து அன்பென்னும் மொழி பேசி, செல்லும் இடமெல்லாம்
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) November 14, 2023
சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் நாளைய உலகை ஆளவிருக்கும் குழந்தைகள் அனைவருக்கும், இனிய குழந்தைகள் தின நாள் வாழ்த்துக்கள்...
இந்நன்னாளில் குழந்தைகள் நலம் காப்போம்!
உளமாற உலகுக்கு வளம்… pic.twitter.com/w1twho3crN
இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சாதி, மத, பேதம் கடந்து அன்பென்னும் மொழி பேசி, செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி கல்லும் கனியாகும் கருணையால் நாளைய உலகை ஆளவிருக்கும் குழந்தைகள் அனைவருக்கும், இனிய குழந்தைகள் தின நாள் வாழ்த்துக்கள்... இந்நன்னாளில் குழந்தைகள் நலம் காப்போம்! உளமாற உலகுக்கு வளம் சேர்ப்போம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.