பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து!

 
eps and modi

பிரதமர் மோடிக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி பிரதமர் மோடிக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இரக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தைரியம் ஆகிய தலைமைப் பண்புகளே பிரதமர் மோடியை தொலைநோக்குப் பார்வையுள்ள பிரதமராக உருவாக்கியுள்ளது. மாண்புமிகு திரு நரேந்திர மோடி தனது கடின உழைப்பின் மூலம் நமது தேசத்தின் உணர்வை உயர்த்தியுள்ளார். அவரது பிறந்தநாளில், அவர் மற்றொரு வெற்றிகரமான பதவிக் காலத்தையும், நூறு வருட சேவையும் ஆற்றிட வாழ்த்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.