ஈபிஎஸ் இன்று டெல்லி பயணம்

 
EPS

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று  டெல்லி பயணம் மேற்கொள்கிறார். 

tn

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்துடன் வருகிற 18-ஆம் தேதி முதல் தொடங்கிய 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.  நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெறவும் , பாஜக தீவிரம்  காட்டி வருகிறது.  இதனிடையே  பாஜக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. 

ep

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். பாஜக கூட்டணி காட்சிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்லும் அவர், உள்துறை அமைச்சர் அமித்ஷா , பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.  

ep

இந்த சந்திப்பின்போது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி,  ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பாஜக தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.