10 லட்சமா? எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு பணப்பட்டுவாடா
எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய ஒன்றியம் வாரியாக அதிமுக நிர்வாகிகள் ஒன்றாக கூடி அந்தந்த கிராமத்தின் பெயரைச் சொல்லி ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் 6 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணத்தை பங்கிட்டு கொள்ளும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இன்று மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டார். இதற்கு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி கந்தர்வோட்டையில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு சென்றவுடன் சிறிது நேரத்திலேயே கந்தர்வகோட்டை தொகுதியைச் சேர்ந்த அதிமுகவின் பல்வேறு ஒன்றியங்களுக்கும் தலா 6 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டு பொதுக்கூட்டத்திற்கு அழைத்துவரப்பட்ட பொதுமக்களுக்கு பண பட்டுவாடா செய்வதற்காக அதிமுக நிர்வாகிகள் ஒன்றாக கூடி 200 ரூபாய் 500 ரூபாய் கட்டாக உள்ள பணத்தை பங்கு போடும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனிசாமியின் புளிச்ச பயணத்திற்கு அழைத்து வரப்பட்ட மக்களுக்கு கட்டுக்கட்டாக பணம் விநியோகிக்கும் வீடியோ...
— Dravida ponnu (@Dravida_ponnu) July 25, 2025
தெளிவான வீடியோ.👇#அடிமையின்_பயணம் pic.twitter.com/ktMX1IwSkN
குறிப்பாக கந்தர்வகோட்டை தொகுதிக்குட்பட்ட சில கிராமங்களின் பெயர்களை கூறி ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை பேர் வருகை புரிந்தனர், அந்த கணக்கின்படி அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பணம் குறித்து பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.


