இளையராஜாவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

 
ச்

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சாதனைகள் படைக்க காத்திருக்கும் இளையராஜா” - ஈ.பி.எஸ். வாழ்த்து |  nakkheeran

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “இந்திய திரையுலகின் இசைத்துறையில் மூன்று தலைமுறையாக கோலோச்சி வருகிற  இசைஞானி இளையராஜா அவர்கள், ஒரு இந்திய இசையமைப்பாளரால்  இங்கிலாந்தில் இயற்றப்பட்ட முதல் முழுமையான மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனியான "வேலியன்ட்" இசையை லண்டன் அப்பல்லோ அரங்கில் நிகழ்த்த உள்ளமைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 


தமிழ்நாட்டின் கிராமப்புரங்களில் இருந்து தொடங்கிய தனது இசைப்பயணத்தை  தற்போது உலக அரங்கில் எடுத்து சென்று தனக்கென தனி முத்திரை பதித்து,  சாதனைகள் பல படைத்து இன்னும் பல  சாதனைகள் படைக்க காத்திருக்கும், இசைஞானி திரு. இளையராஜா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்கிக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.