எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..

 
thangam thennarasu


முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கட்டணம் தெரிவித்துள்ளார். 

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூருக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.   சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் ஜப்பான் சென்றும் தொழில் முதலீடுகளை ஈர்க்க உள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்பச் சுற்றுலா சென்றுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். 

EPS

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி அவதூறு கருத்து பரப்பி வருவதாகவும்,  அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து தொழில் நிறுவனங்களை அண்டை மாநிலங்களுக்கு விரட்டியவர் பழனிசாமி எனவும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார். நான்கு ஆண்டு ஆட்சியில் ஊரெங்கும் ஊழல் என்ற முழக்கத்துக்கு சொந்தக்காரராக கரன்சி மழையில் நனைந்து ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்ந்தவர் எடப்பாடி பழனிசாமி என்றும் அவர் சாடியுள்ளார்.அதிமுக ஆட்சியின் ஊழலை மறைக்க அவதூறு பரப்பும் வேலையில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.