"ஆளுநர் உரை உப்பு சப்பில்லாத உரை; ஊசிப்போன உணவு பண்டம்" - ஈபிஎஸ் கருத்து!
Feb 12, 2024, 12:33 IST1707721394744
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ரவியின் உரை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் உரை உப்பு சப்பில்லாத உரை; ஊசிப்போன உணவு பண்டம்; எதிர்வரும் ஆண்டில் அரசு என்ன செய்ய உள்ளது என்பது குறித்து ஆளுநர் உரையில் இல்லை என்றார்.
தொடர்ந்து அரசின் உரையை ஆளுநர் புறக்கணித்தது குறித்த கேள்விக்கு, “இது ஆளுநருக்கும் சபாநாயகருக்கும் இடையே உள்ள பிரச்னை. எதிர்க்கட்சியான நாங்கள் இதுகுறித்து என்ன சொல்வது? ஆளுநரையும் அரசையும்தான் கேட்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி மழுப்பலாக பதிலளித்து சென்றார்.