வ.உ.சி. 151-வது பிறந்தநாள் - ஈபிஎஸ் மரியாதை!!

 
ttn

வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி , அவரது  திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

epஇந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலார் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து எழுத்தாலும், பேச்சாலும் போராடியதுடன், நாட்டின் முதல் சுதேசி கப்பல்களை இயக்கி, உயிருள்ளவரை தேசத்திற்காக மக்களின் உரிமைக்காகப் பாடுபட்ட செக்கிழுத்த செம்மல்  ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151வது பிறந்தநாளில் அவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன். தனது உயரிய தியாகத்தால் அனைவர் மனதிலும் சுதந்திர வேட்கையை ஏற்படுத்திய தியாகச் செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் தியாகத்தைப் போற்றி சென்னை பசுமை வழிச்சாலை செவ்வந்தி இல்லத்தில் அவர்தம் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்" என்று பதிவிட்டுள்ளார்.