நம் வழி தனி வழி என்ற பாணியில் செயல்படுவோம் - தேனியில் ஈபிஎஸ் பேச்சு

 
EPS

எம்ஜிஆர்,  ஜெயலலிதாவின் கனவை அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்  என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

eps

தேனி மாவட்டம் கம்பத்தில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்க அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேனி வந்தடைந்தார்.  இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி தேனி மாவட்டத்திற்கு வருவது இதுவே முதல் முறை.  அமைப்பு செயலாளர் எஸ்டிகே ஜக்கையா  தலைமையில் குழு அமைக்கப்பட்டு மிகப்பிரமாண்டமாக அவருக்கு வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டது.

ep

 அதன்படி இன்று காலை தேனி வட புதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புறவழி சாலை பிரிவில் எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.  அப்போது மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி , எம்ஜிஆர் ஜெயலலிதா கனவை அனைவரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றுவோம் . அனைவரும் ஒன்றிணைந்து நம் வழி தனி வழி என்ற பாணியில் செயல்படுவோம் என்றார்.