திமுக அரசு மக்களிடம் கொள்ளையடித்து கொண்டு இருக்கிறது- எடப்பாடி பழனிசாமி

 
எடப்பாடி

திமுக அரசை வீட்டிற்கு அனுப்பும் வகையில் நாடாளுமன்ற தேர்தல் திமுக அரசுக்கு பாடமாக இருக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

eps

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட வழங்கிய உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் திமுக அரசு மக்களிடம் கொள்ளையடித்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் 4 ஆண்டுகள் அதிமுகவின் பொற்கால ஆட்சியை கொடுத்தோம். வறட்சியில் இருந்து விவசாயிகளை காப்பாற்றி நிவாரணம் கொடுத்தோம். விவசாயிகளின் கவலையை போக்கும் அரசாக அதிமுக அரசு விளங்கியது. அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு முத்துமுத்தான திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. திமுக அரசு விவசாயிகளுக்கான எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. 

விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட கால்நடை பூங்கா விடியா ஆட்சியில் மூடப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் மக்களுக்கு வேதனைதான் மிச்சம். அம்மா மினி கிளினிக், மாணவர்களுக்கு மடிக்கணினி போன்ற அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த நல்ல திட்டங்களை திமுக அரசு முடக்கியது. ஏழைகளுக்கான நல்ல திட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றிய அரசு நமது அதிமுக அரசு. யாரும் கோரிக்கை வைக்காமல் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீட இட ஒதுக்கீடு வழங்கினோம். அதிமுக அரசின் நலத்திட்டங்களை நிறுத்தியதுதான் திமுகவின் சாதனை. திமுக ஆட்சியில் மக்களுக்கு பயனுள்ள வகையில் எந்த திட்டங்களும் இல்லை, எதுவும் கொண்டுவரப்படவில்லை. மக்களுக்கு நன்மை செய்யாமல் கொள்ளையடிப்பதையே திமுக அரசு குறிக்கோளாக கொண்டுள்ளது” எனக் கூறினார்.