திமுக நான்காக உடையும்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 

திமுக நான்காக உடையும்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகே மேடை அமைத்து தமிழக முதல்வர் பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர்,எம்.ஆர்.விஜயபாஸ்கர்,தங்கமணி,வெல்லமண்டி நடராஜன், வளர்மதி,ராஜ்யசபா உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ஸ்டாலின் அதிமுகவை உடைக்க பல்வேறு வகையில் முயற்சி செய்கிறர். அதிமுக ஆலமரம் போல் குடும்பமாக சகோதரர்களாக உள்ள கட்சி. ஆதலால் அவரது முயற்சி எல்லாம் வீணாகிவிட்டது. ஸ்டாலின் உடன் பிறந்த சகோதரரை கூட தன்னுடன் வைத்து கொள்ளமாட்டார். அப்படிபட்டவர் எதிர்கட்சி தலைவர். திமுகவில் நீடிக்க வேண்டும்மென்றால் உதயநிதி தயவு வேண்டும். அது துரைமுருகன்,நேரு,பெரியசாமிக்கும் பொருந்தும். தலைவர்கள் மண்ணில் பிறந்து மரணிக்கும் இடைப்பட்ட காலத்தில், வாழ்ந்து மக்கள் மனதில் என்றும் வாழ்பவர்கள் தான் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா.

திமுக நான்காக உடையும்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அழகிரி கட்சி ஆரம்பித்த பிறகு திமுக நான்காக உடையும். அதிமுகவில் ஒரு தொண்டனையும் தொட்டு பார்க்க முடியாது. சோதனையிலும் சாதனை படைத்த அரசு அதிமுக அரசு. கொரோனா காலத்தில் ஸ்டாலின் கூலிங்க் கிளாஸ் கையில் கிளாஸ் உடன் காணொலியில் பேசியவர். இந்தியாவிலேய தமிழகம் தான் உயர்கல்வி படிப்போர் விகிதம் அதிகரிப்பு.2011ல் 100 க்கு 32 பேராக இருந்தது தற்போது 49 பேராக உயர்ந்துள்ளது, திமுககாரர்கள் சாப்பிட்டதற்க்கு பணம் கொடுக்காமல் ஹோட்டல் உரிமையாளரை அடிப்பவர்கள். அப்படிப்பட்டவர்களின் கையில் ஆட்சியை கொடுத்தால் என்னாகும்” எனக் கூறினார்.