தவெகவிற்கு தாவிய நிர்மல்குமார்- ஈபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு

 
eps

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 

eps

அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நிர்மல் குமாருக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி உரையாற்றினார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “பிற கட்சியில் இருந்து வருபவர்களுக்கு பதவி வழங்குவதில் கவனம் தேவை. மற்ற மாவட்டங்களில் நடந்தது போல சென்னையில் நடக்கக்கூடாது. கள ஆய்வு கூட்டத்தின்போது தேவையற்ற சலசலப்புகளை தவிர்க்க வேண்டும். தேவையற்றவர்களை கள ஆய்வு கூட்டத்திற்கு அழைக்க வேண்டும். மாநில பொறுப்பு வழங்கியதால்தான் நிர்மல் குமார் கட்சி மாறியது மிகப்பெரிய செய்தியாகியுள்ளது” என்றார்.