ஓபிஎஸ் தனிக்கட்சி துவங்குவார்- எடப்பாடி பழனிசாமி

 
eps

மதுரையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் மூத்த மகள் திருமணம் உட்பட 51 இலவச திருமணங்களை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்துவைத்தார்.

EPS

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “எங்கள் வேட்பாளரை அறிமுகம் செய்த அடுத்த நாளே பாஜக சிடி ரவிக்கு ஆளுநர் பதவி கிடைத்துள்ளது. உச்சநீதிமன்ற மேல் முறையீடு தீர்ப்பு மகிழ்ச்சியாக உள்ளது. பன்னீர்செல்வத்தின் அனைத்து முயற்சியும் தோல்வியடைந்துள்ளது. கழக நிர்வாகிகளை கூட்டி விரைவில் பொது செயலாளர் தேர்வு நடக்கும். உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் இறுதியானது. ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணம் நிறைவேற்றப்பட்டுள்ளது

ஓபிஎஸ் தனிக்கட்சி துவங்குவார். அப்படி துவங்கினால் எங்களுக்கு எதிரியா இல்லையா என்பது தெரியும். அவரை ஒரு ஆளாக பொருட்படுத்தவில்லை. ஒருசிலரை தவிர அனைவருக்கும் அழைப்பு விடுத்தோம். அதற்கு வாய்ப்பே இல்லாத அளவில் தான் உச்சநீதிமன்றம் வரை சென்று இன்று தீர்ப்பு வந்துள்ளது. ஒன்றரைக்கோடி அதிமுக தொண்டர்களின் பொதுச் செயலாளராக உள்ளேன். 2024 ஆண்டு தேர்தல் குறித்து இப்போது பேச வேண்டிய அவசியமில்லை. அவர்களை ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும். எங்களை விட்டு சென்ற எம்எல்ஏ-க்கள் நன்றாக இருக்கிறார்களா என்பதை அவர்களிடமே கேளுங்கள். இந்த தீர்ப்பின் மூலம் அதிமுக தொண்டர்கள் எழுச்சி பெருவார்கள்” எனக் கூறினார்.