திட்டங்களையெல்லாம் எப்படி நிறைவேற்றுவான் என பார்க்கிறேன்! முதல்வரை ஒருமையில் பேசிய ஈபிஎஸ்

 
“முதல்வர் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுவாரா?” – கேட்கும் எடப்பாடி மக்கள்! #edappadi

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு எடப்பாடிக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து. எடப்பாடி சரபங்காற்றில் மூன்று நாட்களுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் நகராட்சி தொடக்கப்பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரிசி,பருப்பு, காய்கறி,உள்ளிட்ட பொருட்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Former TN CM's personal assistant held for cheating people by promising  govt jobs | Cities News,The Indian Express

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக தலைமை அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மை தர்மம் வென்றுள்ளது. கொரோனா பேரிடர் காரணமாக பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்கு உள்ளான பொதுமக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகின்றனர். இந்த நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. திமுக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து அதிமுக சார்பில் வருகின்ற 16ஆம் தேதி தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது. வருகின்ற 2026 ஆம் ஆண்டு மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்திருக்கும். ஏற்கனவே தொகுதிகளில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியாத முதலமைச்சர் தற்போது ஒவ்வொரு தொகுதியிலும் 10 பிரச்சனைகளை வழங்கிடுமாறு கேட்டுள்ளார்.
ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான எந்தவித அறிவிப்புகளையும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இதனால் அரசு ஊழியர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு ஊழியர்களின் நிலை தலைகீழாக மாறிவிட்டது.

தனது தொகுதி உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 10 பிரச்சனைகள் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த  திட்டங்களையெல்லாம் முக ஸ்டாலின் எப்படி நிறைவேற்றப்படுவான்” என்று ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.