அதிமுக என்ன கார்பரேட் கம்பெனியா?- சசிகலாவுக்கு ஈபிஎஸ் கேள்வி

 
சசிகலா எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக விரைவில் சுற்றுப்பயணம். சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது என்றும் இன்னும் 10 நாட்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும் எனவும் அண்மையில் சசிகலா கூறியிருந்தார்.

Vk Sasikala,சசிகலாவை சேர்ப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய  தகவல்! - we will not take back sasikala again says edappadi palanisamy -  Samayam Tamil

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சசிகலா அதிமுக உறுப்பினரே கிடையாது, அவர் எப்படி ஒன்றிணைக்க முடியும், 2021ல் சசிகலா சட்டமன்ற தேர்தலின் போது வெளியிட்ட அறிக்கையில், அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய பிரத்தனை செய்துகொண்டே இருப்பேன் என அறிவித்துவிட்டார். மூன்று ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வருகிறேன் என்கிறார். அதிமுக என்ன கார்பரேட் கம்பெனியா, அரசியல் கட்சி. சசிகலா மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என எண்ணினால் திருமதி ஜானகி அம்மா கட்சி பிரிந்த போது, அவர் அழகாக அறிக்கை விட்டார். அம்மா அவர்கள் கட்சியை ஏற்று நடத்துவார்கள், நான் உறுதுணையாக இருப்பேன், மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சி அமைய வேண்டும் என சொன்னார். அந்த நற்பண்பும் இவரிடம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம், அந்த நல்ல எண்ணத்தில் அவர் செயல்பட வேண்டும் என தொண்டர்கள் எண்ணுகிறார்கள்” என்றார்.