அதிமுக ஆட்சியில் காவல்துறையினர் சுதந்திரமாக இருந்தார்கள்- ஈபிஎஸ்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இது போன்ற சம்பவம் தமிழ்நாடு நடக்க கூடாது என்றால் இந்த வழக்கை சிபிஐ இடம் ஒப்படைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “23ஆம் தேதி ஞானசேகரன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார், 24ஆம் தேதி மாணவி புகார் செய்திருக்கிறார். புகார் செய்ததும் ஞானசேகரனை அழைத்து விசாரித்து இருக்கிறார்கள். உடனே விடுவித்து இருக்கிறார்கள்... எந்த விதத்தில் அவர் விடுவிக்கப்பட்டார்? பாலியல் வன்கொடுமை செய்து ஒருவர் மீது புகார் வந்த பிறகு அவரை கைது செய்யாமல் ஏன் விடுவித்தீர்கள்? என்று மக்கள் கேட்கிறார்கள்..
காவல்துறை உயர் அதிகாரி சொல்கிறார் 100-க்கு புகார் வந்தவுடன் வழக்கு பதிவு பெற்றிருப்பதாக ஒரு கம்ப்ளைன்ட் சொல்கிறார். ஆனால் அந்த துறை அமைச்சர் போஸ்டலுக்கு கம்ப்ளைன்ட் வரவில்லை என்று சொல்கிறார் நூறு சதவீதம் வரவில்லை, நேரடியாக காவல் நிலையத்தில் தான் அந்த மாணவி புகார் தெரிவித்தார் என்று கூறப்பட்ட கருத்தை தெரிவிக்கிறார். மாணவி தெரிவித்த கருத்துக்கும் அமைச்சர்கள் முரண்பட்ட கருத்து இருக்கிறது. இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் ஆளுங்கட்சியை சேர்ந்த நபர்கள் சம்பந்தப்பட்டதாக பத்திரிகை செய்தி வருகிறது. ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவராக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது எல்லாம் பார்க்கின்ற பொழுது ஆளுங்கட்சியை சேர்ந்தவரை தப்பிக்க வைக்க இந்த காவல்துறை செயல்படுகிறது என்ற அச்சம் மக்களுக்கு இருக்கிறது. நடுநிலையோடு உண்மையாக பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் என்று விசாரணை நடைபெற வேண்டும், இந்த வழக்கை சிபிஐவசம் ஒப்படைக்க வேண்டும்.
பல அமைச்சரோடு ஞானசேகர் இருப்பதாக புகைப்படம் வந்திருக்கிறது. அதுக்கும் அமைச்சர் பல்வேறு காரணங்களை சொல்கிறார். திமுகவின் பொறுப்பில் இருப்பதாக பத்திரிகைகளில் செய்து வந்து கொண்டிருக்கிறது, அதை மறைப்பதற்கு எவ்வளவு நாடகங்கள் அரங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கு பதிவு செய்தவுடன் அவர் பெயர் உள்ள விளம்பர பேனர்கள், நோட்டீஸ் போஸ்டர் எல்லாம் கிழித்தெரியப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது. திமுகவை சேர்ந்த ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்க கூடாது என்ற நிலையில் தான் இருப்பதாக சந்தேகம் எழுகிறது
அதிமுக ஆட்சியருக்கும்பொழுது சட்டத்தின் ஆட்சி நடந்தது ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக தமிழ்நாடு காவல்துறை செயல்பட்டது. ஆனால் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக திரிகிறார்கள் வேலியே பயிரை மேய்ந்த கதையாக தமிழ்நாடு நிலைமை இருக்கிறது. அதிமுக ஆட்சியில் குற்ற செயலில் ஈடுபடுவதற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டது, அந்த நிலைமை தற்பொழுது தலைகீழாக மாறி இருக்கிறது. அதிமுக ஆட்சியில் காவல்துறையினர் சுதந்திரமாக இருந்தார்கள்” என்றார்.