”எட்டு தோல்வி எடப்பாடி” எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்க!

 
ep

எட்டு தோல்வி எடப்பாடி என திசையன்விளை பஜார் பகுதியில் ஓ.பி.எஸ்  ஆதரவாளர் ஒருவரால்  இம்சை அரசன் 23ஆம் புலிகேசி கெட்டப்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

AIADMK Poster

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததை ஒட்டி திசையன்விளையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து ஓபிஎஸ் ஆதரவாளரால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அதிமுக தொகுதி ஓ.பி.எஸ் அணியின் நாங்குநேரி தொகுதி  அமைப்பாளராக இருப்பவர் டென்சிங் சுவாமிதாஸ்.

இவர் திசையன்விளை, இட்டமொழி சுற்றுவட்டார பகுதிகளில் "எட்டு தோல்வி எடப்பாடி"  என்ற தலைப்பில். எடப்பாடி வசம் அதிமுக வந்த பிறகு தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் 2019 இல் நடந்த 22 சட்டசபை இடைத்தேர்தல், 2021 ஆம் ஆண்டு  சட்டமன்றத் தேர்தல், 2021 இல் நடந்த மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2022 இல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. 

eps

8 தோல்விகளை கண்ட எடப்பாடி எனவும் உடனடியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் டென்சிங் ஸ்வாமிதாஸ் சுவரொட்டி அடித்துள்ளார். இது அப்பகுதி அரசியல் கட்சி பிரமுகர்கள் இடையே பரபரப்பையும் அதிமுகவினரிடம் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.