அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

 
eps

டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

Image

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கி உள்ளது. எதிர்க்கட்சிகள் ஒருபுறம் இந்தியா கூட்டணியை உருவாக்கி அடுத்தடுத்த ஆலோசனை கூட்டங்களை நடத்திவருகின்றன. அதேபோல் பாஜகவும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து தனது இருப்பை காட்டிவருகிறது. 

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ளார். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளதாக தெரிகிறது. நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் தொடர்பாக பாஜக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க இருக்கிறார். டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அவரது இல்லத்தில் சந்தித்து தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகிப்பதால், வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி ஆலோசித்ததாக தெரிகிறது.