டெல்லியில் மூத்த வழக்கறிஞர்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை

 
 எடப்பாடி பழனிசாமி..

டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூத்த வழக்கறிஞர்களுடன் தனியார் விடுதியில் ஆலோசனை மேற்கொண்டார். 

Image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ளார். அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நட்டாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளதாக தெரிகிறது. முன்னதாக டெல்லி விமானநிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை, அதிமுக எம்பி தம்பிதுரை வரவேற்றார்.

அதேசமயம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் பற்றிய பாஜக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவும் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். இதனிடையே டெண்டர் முறைகேடு வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், அது தொடர்பாக டெல்லியில் மூத்த வழக்கறிஞர்களுடன் ஈ.பி.எஸ் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.