சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டம்- போராட்டம் நடத்த ஓபிஎஸ் அணி திட்டம்

 
eps

சிவகங்கையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை ஒட்டி சிவகங்கை மாவட்ட  அதிமுக சார்பில் வருகிற 11 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசுகிறார். இதையொட்டி சிவகங்கை சிவன் கோவில் அருகில் மேடை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. 

EPS , OPS

இந்தநிலையில் அதிமுக ஓபிஎஸ் பிரிவின் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் அந்த கட்சியை சேர்ந்த ஏராளமானோர் இன்று  சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்தனர். தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வகுமாரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். மனுவில் வருகிற 11-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகங்கை அரண்மனை வாசலில் உண்ணாவிரதம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் இருந்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒ. பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர் கே ஆர்.அசோகன், “1972ல் தொண்டர்கள் இயக்கமாக எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கைப்பற்ற நினைக்கிறார். அவர் தலைமையில் இதுவரை அதிமுக 8 தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளது. தனது சொந்த சுயநலத்துக்காக அதிமுகவை பல்வேறு பிரிவுகளாக உடைய காரணமாக இருந்து வருகிற எடப்பாடி பழனிச்சாமி கண்டித்தும் எம்ஜிஆர் ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட அதிமுகவையும் தொண்டர்களையும் ஒருங்கிணைக்க வலியுறுத்தியும் 11ஆம் தேதி சிவகங்கை அரண்மனை வாசலில் உண்ணாவிரதம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.

சிவகங்கை வரும் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க  சிவன் கோவில் முன்பாக பொதுக்கூட்டம்  நடத்துவதற்கு ஈபிஎஸ் அணியினர்  இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு முன்கூட்டியே கடந்த 4 ஆம் தேதி போலீசில் மனு அளித்து, நகராட்சியிடம் பணமும் கட்டியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.