600-600 மதிப்பெண் பெற்ற நந்தினிக்கு பழனிசாமி நேரில் வாழ்த்து

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்துலயே 600/600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (12.05.2023 - வெள்ளிக் கிழமை), திண்டுக்கல் மேற்கு மாவட்டம், திண்டுக்கல் மேற்கு ஒன்றியம், முள்ளிப்பாடி ஊராட்சி, எம்.எம்.கோவிலூர் பிரிவு கிளைக் கழகச் செயலாளர் பி. ஆறுமுகத்தின் பேத்தியும், திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்றுவந்த மாணவியுமான ச. நந்தினி, அனைத்துப் பாடங்களிலும் முழு மதிப்பெண்னான 600-க்கு 600 பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதையொட்டி தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் மாநிலத்துலயே 600/600 மதிப்பெண் பெற்ற மாணவி #நந்தினி அவர்களுக்கு
— Anbarasu ajith (@AjithAnbarasu) May 12, 2023
கழக பொது செயலாளர்
மாண்புமிகு #எடப்பாடியார் அவர்கள் வாழ்த்துக்கள் கூறினார்@AIADMKOfficial @EPSTamilNadu @AIADMKITWINGOFL @satyenaiadmk pic.twitter.com/pNBVZg6qlO
. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் மாநிலத்துலயே 600/600 மதிப்பெண் பெற்ற மாணவி #நந்தினி அவர்களுக்கு
— Anbarasu ajith (@AjithAnbarasu) May 12, 2023
கழக பொது செயலாளர்
மாண்புமிகு #எடப்பாடியார் அவர்கள் வாழ்த்துக்கள் கூறினார்@AIADMKOfficial @EPSTamilNadu @AIADMKITWINGOFL @satyenaiadmk pic.twitter.com/pNBVZg6qlO
மாணவி ச. நந்தினி அவர்கள் கல்வியில் மென்மேலும் சிறந்து விளங்கிட, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K.பழனிசாமி, தமது இதயமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வின்போது, கழகப் பொருளாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், M.L.A., கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் V.P.B. பரமசிவம், Ex.M.L.A., உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.