செப்.24, 26-ல் மதுராந்தகத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்..!
மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் அக்.06- ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்.09- ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் தொகுதியில் வரும் செப்.24, 26 ஆகிய தேதிகளில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
செப்.24- ஆம் தேதி பிற்பகல் 03.00 மணிக்கு மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட மாமண்டூரிலும், மாலை 04.30 மணிக்கு பூதூரிலும், மாலை 06.00 மணிக்கு தேவத்தூரிலும், இரவு 07.00 மணிக்கு சரவம்பாக்கத்திலும், வரும் செப்.26- ஆம் தேதி பிற்பகல் 03.00 மணிக்கு எல்.எண்டத்தூரிலும், மாலை 04.30 மணிக்கு ராமாபுரத்திலும், மாலை 06.00 மணிக்கு எலப்பாக்கத்திலும், இரவு 07.00 மணிக்கு ஒரத்தியிலும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகிய இருவரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதையடுத்து. இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகிய இருவருமே மீண்டும் தவெக சார்பில் வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

