மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததுதான் தவெக-வின் சாதனை: எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
Aug 18, 2026, 05:40 IST1787011841000
அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் சட்டசபை வளாகத்தில் அவர் அளித்த பேட்டி;
100 நாள் தவெக ஆட்சியில் எந்தவொரு, பெரிய, புதிய திட்டமும் கொண்டு வரவில்லை. அறிவிக்கவும் இல்லை. அதோடு, 2026 சட்டசபை தேர்தலின் போது தவெக சார்பில் பல அறிவிப்புகளை வெளியிட்டனர். அதில் முக்கியமான அறிவிப்புகள் எதுவுமே நிதிநிலை அறிக்கையிலும் வெளிப்படுத்தவில்லை.
இன்றைய தினம் விதி எண் 110ன் கீழ் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம், அதுவும் நடக்கவில்லை, அறிவிக்கவில்லை. ஆக, தமிழக மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்தது தான் இந்த ஆட்சியின் சாதனை.
இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

