"கடன் வாங்குவதில் ஸ்டாலின் சூப்பர் முதலமைச்சர்”- எடப்பாடி பழனிசாமி

 
eps eps

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

eps

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “வேங்கைவயல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளே இன்னும் கண்டறியாத நிலையில், மதுரை சோழவந்தான் அருகே மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது போன்ற குற்றங்களைத் தடுக்க ஸ்டாலினுக்குத் திறமையில்லை. அதிமுக ஆட்சி அமைந்ததும் வணிகர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். கோழி, முட்டை மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் அதிமுக ஆட்சி அமைந்ததும் நடைமுறைப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில்‌ வீட்டு வரி 100 %, மின்கட்டணம்‌ 67 % உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம். கடன் வாங்குவதில் ஸ்டாலின் சூப்பர் முதலமைச்சர்.” என்றார்.