ஆபரேஷன் சிந்தூர்..! இந்திய ராணுவத்திற்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு!
May 7, 2025, 14:06 IST1746606999447
ஆபரேஷன் சிண்டூர் என்ற திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தியதற்காக இந்திய ராணுவத்தை பாராட்டுவதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தின் போது இந்திய விமானங்களை தாக்க வந்த பாகிஸ்தான் போர் விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. தீவிரவாத முகாம்களை நோக்கி இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஆபரேஷன் சிண்டூர் என்ற திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தியதற்காக இந்திய ராணுவத்தை பாராட்டுவதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் போஜ்பூர் காஷ்மீர் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து #ஆபரேஷன் சிண்டூர் என்ற திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தியதற்காக இந்திய ராணுவத்தை நான் பாராட்டுகிறேன். மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த தீர்க்கமான நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் நமது குடிமக்களைப் பாதுகாப்பதற்கும் நமது நாட்டின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.


