அமலாக்கத்துறை அதிரடி! ஆண்டாள் என்பவரின் ரூ.1000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

பிரபல தொழிலதிபரின் மகள் ஆண்டாள் என்பவருக்கு சொந்தமான சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் பிரபல தொழிலதிபரின் மகள் ஆண்டாள் என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களும், சுமார் 900 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 31ம் தேதி சென்னையில் பிரபல தொழிலதிபரின் மகள் ஆண்டாள் என்பவரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத வருமானம் மற்றும் பல்வேறு குற்றஞ்சாட்டப்பட்ட ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில், சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.