டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை!
Mar 7, 2025, 08:58 IST1741318111349

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், 2வது நாளாக அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். டாஸ்மாக் தலைமை அலுவலகம், திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். மேலும் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழ்நாட்டில் பல்வேறு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், 2வது நாளாக அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.