பெரும் பரபரப்பு! அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

அமைச்சர் கே.என்.நேரு வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை முதலே அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினறுமான அருண் நேரு வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அருண் நேருவுக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேரு வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை யில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் அந்த பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் கே.என்.நேருவின் மறைந்த தம்பி ராமஜெயம் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.