லாட்டரி அதிபர் மார்டின், ஆதவ் அர்ஜூனா சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

 
martin

சென்னையில் லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னையில் காலை முதலே லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் 
கோவை துடியலூரில் உள்ள மார்ட்டினின், வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரு கார்களில் வந்துள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் தொடர்பான சோதனையின் ஒரு பகுதியாக அவரது மருமகன் ஆதவ் அர்ஜூனா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.