அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை
Apr 7, 2025, 07:57 IST1743992829411

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த கட்டுமான நிறுவனம் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.