முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!!
முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் சென்னை சேப்பாக்கம் எம்.எல்.ஏ விடுதியில் அமைந்துள்ள அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ விடுதி அறையில் இல்லை. இருந்தபோதிலும் எம்எல்ஏ விடுதி நிர்வாகத்திடம் சாவி வாங்கி, அவரது அறையை சோதனையிட்டு வருகின்றனர்
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக கட்டுமான நிறுவனத்திடம் ரூ. 28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையின் முடிவில் கைப்பற்றப்படும் ஆவணங்களை பொறுத்துதான் சோதனை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், சோதனியின் முடிவிலேயே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.