அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் எம்.சி சங்கரின் இல்லம் கரூரில் அமைந்துள்ளது. இவர் அரசு ஒப்பந்ததாரராக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் உள்ள ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சென்னையிலும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.