கோவையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

கோவையில் அமைச்சர் நேருவின் சகோதரர் மணிவண்ணன் இல்லத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.
காலை முதலே அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினறுமான அருண் நேரு வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் கோவையில் உள்ள அவரது சகோதரர் மணிவன்னன் இல்லத்திலும் சோதனை நடந்தது.
இந்த நிலையில், கோவையில் அமைச்சர் நேருவின் சகோதரர் மணிவண்ணன் இல்லத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. 3 வாகனங்களில் வந்த அதிகாரிகள் நேற்று காலை 7 மணி முதல் இன்று காலை 4 மணி வரை சோதனை நடத்தினர். TVH அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் ஆவணங்களை எடுத்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.