எல்2 எம்புரான் பட தயாரிப்பாளர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை

 
emburan

எல்2 எம்புரான் பட தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிரனர். 

எல்2 எம்புரான்" பட தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இவருடைய கோகுலம் சிட்பண்ட்ஸ்க்கு சொந்தமான தமிழக மற்றும் புதுச்சேரி அலுவலகங்களில் கடந்த 2017ல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான ஆவணங்கள் அமலாக்கத்துறைக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், புதிதாக மேலும் சில ஆவணங்கள் இது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு கிடைத்துள்ளன. அந்த ஆவணங்களின் அடிப்படையில் சோதனையானது நடைபெற்று வருகிறது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் சிட்பண்ட்ஸ்க்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.