அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!!

 
senthil balaji

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

senthil balaji

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலக்க துறையால் கைது செய்யப்பட்டார்.  தற்போது செந்தில் பாலாஜியின் மீதான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.  இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர்  செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.  இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. அதன்படிசெந்தில் பாலாஜி ஜாமின் மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

senthil balaji

இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறையின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.  செந்தில்பாலாஜியின் உடல்நிலையை கருதி ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில்பாலாஜி தரப்பு கோரிக்கை விடுத்த நிலையில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.