ஈசிஆர் விவகாரம்- டோல்கேட்டை கடந்து செல்ல திமுக கொடியை பயன்படுத்தியதாக துணை ஆணையர் விளக்கம்

 
f

ஈசிஆரில் காரில் சென்ற பெண்கள் மிரட்டப்பட்ட விவகாரத்தில் டோல்கேட்டை கடந்து செல்ல, கட்சி கொடியை பயன்படுத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக துணை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுகாட்டில் பெண்கள் இருந்த காரை இரண்டு கார்களில் வந்த இளைஞர்கள் காரை குறுக்கில் நிறுத்தி மடக்கி, பின் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக கானத்தூர் போலீசில் வழக்குபதிவு செய்த நிலையில் தனிப்படை போலீசார் இரண்டு கார்களையும் தேடிவந்தனர். இந்த விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கரணை போலீஸ் துணை ஆணையர் கார்த்திகேயன், “ஈ.சி.ஆர்., சம்பவத்தில் மொத்தம் 7 பேர் ஈடுபட்டுள்ளனர்; இன்னும் 3 பேர் கைது செய்யப்பட வேண்டியுள்ளது. இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வழக்கின் முக்கிய நபரான சந்துரு மீது கடத்தல் மற்றும் மோசடி வழக்கு உள்ளது. ஈசிஆரில் காரில் சென்ற பெண்கள் மிரட்டப்பட்ட விவகாரத்தில் டோல்கேட்டை கடந்து செல்ல, கட்சி கொடியை பயன்படுத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெண்களுக்கு பாலியல் ரீதியிலான தொல்லை இல்லை. ஓட்டுனர் அதை பயன்படுத்தி இருக்கிறார். தி.மு.க.,வுக்கும் பெண்களை காரில் துரத்திய நபர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை."டோல்கேட்" மற்றும் பார்க்கிங் கட்டணங்களை தவிர்க்க இந்த நபர்கள் காரில் கட்சி கொடியை கட்டியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது” எனக் கூறினார்.