ஈசிஆர் சம்பவம் - கல்லூரி மாணவர் கைது

சென்னை ஈ.சி.ஆரில் காரில் சென்ற பெண்களை துரத்தி தாக்க முயன்ற சம்பவத்தில் தொடர்புடையவர் என உறுதிபடுத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 25 ஆம் தேதி சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தியதாக வீடியோ காட்சிகள் வெளியாகின. அவர்களிடம் இருந்து தப்பித்த பெண்களை வீடு வரை துரத்தி வந்த கயவர்கள், வீட்டில் இருந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் கூடியதால் அங்கிருந்து சென்றதாகவும், இது குறித்து புகாரளித்தால் "இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச்சொன்னது" என்று காவல்துறையினர் கேட்டதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறினர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இளம்பெண்கள் வந்த காரை, திமுக கட்சி கொடி கட்டிய காரில் வந்தவர்கள் துரத்திய சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இதில் ஈடுபட்டது 8 பேர் என்பது தெரியவந்தது. மேலும் கிழக்கு தாம்பரம் பகுதியில் ஒரு வீட்டில் 2 கார்களும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணை செய்த போலீசார், இச்சம்பவத்தில் ஈடுபட்டது காட்டாங்குளத்தூர் பகுதியில் இயங்கிவரும் பிரபல தனியார் கல்லூரியில் பயின்று வருபவர்கள் என்பதை கண்டறிந்து அதில் ஒரு மாணவரை கைது செய்துள்ளனர்.