டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி; தமிழகம் முழுவதும் உஷார் நிலை..!
டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என தெரிவித்துள்ளார்.
Shocked and deeply pained by the explosion near Delhi’s Red Fort that has taken several innocent lives. Visuals from the site are truly heartbreaking.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 10, 2025
My heartfelt condolences to the bereaved families and my thoughts are with those battling injuries. Wishing them strength and a…
Shocked and deeply pained by the explosion near Delhi’s Red Fort that has taken several innocent lives. Visuals from the site are truly heartbreaking.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 10, 2025
My heartfelt condolences to the bereaved families and my thoughts are with those battling injuries. Wishing them strength and a…
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், "டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் வெடித்த செய்தி மிகுந்த வருத்தத்தையும் கவலையையும் அளிக்கிறது. இந்த துயர விபத்தில் பல அப்பாவி உயிர்களை இழந்தது மிகுந்த துயரத்தை அளிக்கிறது.இந்த துயரமான நேரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருடன் நான் நிற்கிறேன். மேலும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள பதிவில், "டெல்லியில் நடந்த துயரமான கார் வெடிப்புச் சம்பவத்தைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என் இதயம் இரங்குகிறது. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும், வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக சென்னை எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், பயணிகள் பெயரில் ஊடுருவல் ஏதும் நடக்கின்றதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லைகளிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூட கூடிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

