முதலமைச்சரின் ஆய்வின் எதிரொலி- புதுப்பொலிவுடன் எம்.சி.ராஜா மாணவர் விடுதி
முதலமைச்சர் விஜய் சைதாப்பேட்டை எம்சி ராஜா சமூகநீதி விடுதியில் மேற்கொண்ட திடீர் ஆய்வை தொடர்ந்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு விளையாட்டு மைதானம் இன்று திறந்துவைக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்த எம்.சி.ராஜா விடுதி செயல்பட்டு வருகிறது. காமராஜர் காலத்தில் இந்த விடுதி கட்டப்பட்டிருந்தாலும் கூட, கடந்த திமுக ஆட்சியில் ரூ.45 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2025ஆம் ஆண்டு திறந்து வைத்தார். இந்த நிலையில், இந்த விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களையும் அவர்களுக்கான வசதிகள் குறித்து முதல்வர் விஜய் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அங்கு தங்கியிருக்கும் மாணவர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டதன் எதிரொலியாக புதுப்பொலிவு பெற்றுள்ளது சென்னை எம்.சி.ராஜா மாணவர் சமூகநீதி விடுதி. நீண்ட நாட்களாக மூடிக்கிடந்த உள்விளையாட்டு அரங்கம் நேற்று திறந்து வைக்கப்பட்ட நிலையில், விடுமுறை நாளை உற்சாகமாக கொண்டாடும் வகையில், இன்று உற்சாகமாக மாணவர்கள் விளையாடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. மேலும் கொசுத் தொல்லையை குறைக்க மருந்து அடிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

