புரட்டாசி எதிரொலி- முட்டை விலை சரிவு
Updated: Sep 25, 2026, 19:04 IST1790343280850
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிந்துள்ளது.
புரட்டாசி மாதம் பிறந்ததால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை இன்று 20 காசுகள் சரிந்தது. ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக 5 ரூபாய் 60 காசுகளாக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 20 பைசா குறைந்து 5 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம். புரட்டாசி மாதம் என்பதால் முட்டைகள் தேக்கமடைந்ததே விலை சரிவுக்கு காரணம் என பண்ணையாளர்கள் கூறுகின்றனர். 13 நாட்களுக்கு பிறகு முட்டை பண்ணை கொள்முதல் விலை சரிந்துள்ளது.

