#BREAKING EB ஊழியர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்- ரூ.16,800 போனஸ்

 
eb

தமிழக மின்சார வாரியத்தில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கி தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDC L), மின் உற்பத்திக் கழகம் (TNP GCL), பசுமை எரிசக்தி கழகம் (TNG ECL) மற்றும் மின் தொடரமைப்புக் கழகம் (TANTRANSCO) ஆகிய நான்கு கழகங்களில் பணிபுரியும் ஊதிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு (Class III & IV) இது பொருந்தும். போனஸ் 8.33%- Payment of Bonus Act 1965 மற்றும் திருத்தப்பட்ட 2015 சட்டத்தின்படி Ex-gratia 11.67%, ஊதியம் ரூ.7000-க்கு மேல் இருந்தாலும் கணக்கீடு ரூ.7000 என்ற அடிப்படையில் தான். அதன்படி அதிகபட்ச போனஸ் ரூ.6,997 + Ex-gratia ரூ.9,803 = மொத்தம் ரூ.16,800 வரை கிடைக்கும்.

முழு ஆண்டும் வேலை செய்யாதவர்களுக்கு Bonus Act Section 13 பிரிவின்படி வேலை செய்த நாட்களை வைத்து குறைக்கப்பட்டு வழங்கப்படும். போனஸ் தொகை "TNPDC L Funds - Revenue Expenses - Account No.4030130" என்ற கணக்கிலும், Ex-gratia தொகை "Account No.4030131" என்ற கணக்கிலும் வரவு வைக்கப்பட்டு, வரும் 4.11.2026 அன்று ECS (Electronic Clearance System) மூலம் Cashless முறையில் அனைத்து தகுதியான ஊழியர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்வாரிய தொழிலாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.