அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 5.0ஆக பதிவு..

 
அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 5.0ஆக பதிவு..

அந்தமான் நிகோபர் தீவில் 5.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

அண்மையில் துருக்கி , சிரியாவில் ஏற்பட்ட நிலடுக்கங்களால் 50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த பேரிழப்பால் ஏற்பட்ட தாக்கத்திலிருந்தே உலக நாடுகள்  மீளாத நிலையில், தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.  குறிப்பாக இந்தோனேசியா,  ஜப்பான், இலங்கை, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.  இந்தியாவிலும் சில மாநிலங்களில் நில அதிர்வுகள் ஏற்பட்டன.

அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 5.0ஆக பதிவு..

அந்தவகையில்  இந்தியாவின் ஓர் அங்கமான அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது  ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்து உறுதிபடுத்தியிருக்கிறது.  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதேபோல் குஜராத் மாநிலத்திலும் 4.0 என்கிற  ரிக்டர் அளவில்  லேசான நில அதிர்வு ஏற்பட்டது.