“வெற்றி பயணம்... பெண் பயணிகளிடம் கனிவாக பேசி, ஜிரோ டிக்கெட் வழங்க வேண்டும்”- தமிழக அரசு
வெற்றி பயணம் பேருந்துகளில் ஜீரோ டிக்கெட் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பேருந்துகளில் டிஜிட்டல் பலகையில் வெற்றி பயணம் என்பதை தெளிவாக காட்சிப்படுத்தப்பட வேண்டும். மேலும் டிஜிட்டல் பலகை இல்லாத பேருந்துகளில் வெற்றி பயணம் என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும். வெற்றி பயணம் பேருந்துகளில் ஜீரோ டிக்கெட் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். டிக்கெட் வழங்காத நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வெற்றி பயணம் பேருந்துகளுக்கு பணியாளர்களை விடுமுறை என்றால் மாற்று பணியாளர்களை உடனடியாக நியமித்து பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளை வெற்றிப் பயணம் பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்காக தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட்டுள்ளது. பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட வழித் தடங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இயக்கப்பட வேண்டும் மேலும் அந்தந்த வழித்தடங்களில் பெண் பயணிகளை ஏற்றி பத்திரமாக இறக்கி விட வேண்டும். கனிவாக பேச வேண்டும். அவர்களிடம் மனது புண்படும்படி பேசியது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

