உருவானது புதிய கூட்டணி! கூட்டணி பெயரை விஜய் விரைவில் அறிவிப்பார்- துரை வைகோ

 
ச்

கூட்டணிக்கான பெயரை தான் யோசித்து வைத்திருப்பதாக முதல்வர் விஜய் கூறினார் என மதிமுக எம்பி துரை வைகோ கூறியுள்ளார்.

தோழமை கட்சி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “கூட்டத்தில் ஊழல் அற்ற ஆட்சி நடப்பதாக தோழமை கட்சிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கூட்டணிக்கு புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. CM விஜய் விரைவில் அறிவிப்பார். கூட்டணிக்கான புதிய பெயரை கலந்து ஆலோசித்து விரைவில் அறிவிப்பேன் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். கூட்டணிக்கான பெயரை தான் யோசித்து வைத்திருப்பதாகவும் விஜய் கூறினார். பிரிவினைவாத அரசியல், பண அரசியலுக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்” என்றார்.