வண்டல் மண், களிமண் எடுக்க ஜூலை 3ம் முதல் விண்ணப்பிக்கலாம்- துரைமுருகன்

 
துரைமுருகன்

கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களில் இருந்து விவசாய பயன்பாட்டுக்கும், பானைத் தொழில் செய்யவும் கட்டணம் இல்லாமல் மண், வண்டல் மண், களிமண் வெட்டி எடுக்க வரும் ஜுலை 3ம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என பேரவையில் தெரிவித்தார்.

தொகுதிக்கு நன்மை நடக்க என்ன செய்ய வேண்டும்? - எம்எல்ஏக்களுக்கு துரைமுருகன்  அறிவுரை | Duraimurugan advice to MLAs - hindutamil.in

பேரவையில் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களில் இருந்து விவசாய பயன்பாட்டுக்கும், பானைத் தொழில் செய்யவும் கட்டணம் இல்லாமல் மண், வண்டல் மண், களிமண் வெட்டி எடுக்க அந்தந்த வட்டாட்சியரிடமே இணையவழியில் அனுமதி பெறும் புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜுன் 13ம் தேதி அறிவித்திருந்தார். இதுகுறித்து பேரவையில் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், களிமண் எடுப்பது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். இதுதொடர்பாக கடந்த ஜுன் 25ம் தேதி நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் எளிதாக இணையதளம் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம். இதுவரை 5000க்கும் மேற்பட்ட நீர்வளத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள், 6,700க்கும் மேற்பட்ட ஊரகவளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

விவசாயிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள ஏரிகள் மட்டுமல்லாமல் தங்கள் தாலுக்காவில் உள்ள நீர்நிலைகளையும் வண்டல் மண்ணை எடுத்துக்கொள்ளலாம். இதனால் ஏரிகள் தூர்வாரபடுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயரும். எனவே, விவசாயிகள் வரும் ஜுலை 3ம் தேதி முதல் இ-சேவை மையங்கள் மூலமாக, இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்து பயன்பெற்றுக்கொள்ளலாம், என தெரிவித்தார்.