"ஆளுங்கட்சிதான் இடைத்தேர்தலில் ஜெய்க்கும் என்பது இலக்கணம் கிடையாது"- துரைமுருகன்
Sep 9, 2026, 15:51 IST1788949305951
இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கணம் கிடையாது என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் துரைமுருகன், “ஆளுங்கட்சிதான் இடைத்தேர்தலில் ஜெய்க்கும் என்பது, இலக்கணம் கிடையாது. திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தேர்தல் களத்தில் வந்து பாருங்கள் என்ன பிரச்சனையைப் பற்றிச் சொல்லி பிரச்சாரம் செய்கிறோம் என்று... எம்.ஜி.ஆர் ஆளுங்கட்சியாக இருக்கும் போதே அண்ணாநகர், மயிலாடுதுறை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். அதனால், களம் மாறும் பொறுத்திருந்து பாருங்கள். இடைத்தேர்தலில் திமுவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அது எப்படி என்று இப்பொழுதே சொன்னால் Question Out ஆன மாதிரி ஆகிவிடும்” என்றார்.

