"நாம் போய் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை"- விஜய்க்கு துரைமுருகன் அட்வைஸ்

 
duraimurugan

முதலமைச்சர் விஜய் கர்நாடகா பயணம் மேற்கொள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், “காவேரியில் இரண்டு பிரச்சினைகள் இருக்கிறது. காவிரி பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் அல்லது காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுக வேண்டும். காவிரி பிரச்சனைக்கு முதலமைச்சர் விஜய் கர்நாடகா நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தினால் சுப்ரீம் கோர்ட் உத்தரவு வீணாகிவிடும். எம்ஜிஆர் சென்று பேச்சுவார்த்தை நடத்திய காலம் என்பது நீதிமன்ற உத்தரவு இல்லாத காலம். சுப்ரீம் கோர்ட் உத்தரவு நம்மிடம் இருக்கும் போது நாம் போய் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுகவை அழைக்காவிட்டாலும் பரவாயில்லை. மற்ற எதிர்க்கட்சிகளை கூட்டியாவது முதலமைச்சர் ஆலோசனை செய்திருக்க வேண்டும். மாணவர்கள் ஒன்று சேர்ந்தால் சக்தி பெரிதாகிவிடும்” என்றார்.